எங்க வீட்டுல இருந்து வெம்பக்கோட்டை ரோட்டுல கார் எடுத்துட்டு ஒரு ரவுண்டு போலாம்னு நானும் என் பையனும் கிழம்பினோம்.
என் பையன் யாழினி வீட்டுக்கு போலாம் அப்பா, யாழினி விளையாட நெறய பொருள் வச்சிருக்கா. எனக்கு விளையாட பொருள் தருவா அப்டின்னு சொன்னான். நானும் அவன் சொல்லுக்கு இசைந்தேன், இருவரும் தங்கை வீட்டுக்கு போனோம். என் பையனுக்கும் என் தங்கச்சி பொண்ணுக்கும் 3 வயசு. நாங்க ரெண்டு பேரும் தங்கச்சி வீட்டுக்கு போய் சேர்ந்ததுல இருந்து குழந்தைகள் கிட்டத்தட்ட 1 மணி நேரம் விளையாடினார்கள். அதன் பிறகு என் மகன் என்னிடம் யாழினியின் விளையாட்டு சாமான்களை நம் வீட்டுக்கு கொண்டு செல்லலாம் அப்பா என்றான். உடனே யாழினி, நீங்கள் எடுத்துகொண்டு போக கூடாது. மீறினால் என் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லிவிட்டு அவளின் அப்பாவிடமும் சொல்லிவிட்டால். குழந்தைகள் எவ்வளவு இயல்பாக தங்களின் தேவைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியம்.இவ்வாறான சற்று நேர விவாதங்களுக்கு இடையில் யாழினி, என் மகனிடம் உன்னை தூக்கி நான் சுற்றட்டுமா என சொல்லி சுற்ற முயன்றால், என் மகனை கீழேயும் போட்டுவிட்டால், யாழினி தலையிலும் அடி பட்டுவிட்டது. இருந்தாலும் இருவரும் ஒருவருக்கொருவர் சமாதானம் சொல்லிக்கொண்டு எழுந்து விளையாட தொடங்கினர். நான் இந்த நிகழ்வுகளை வெறுமனே கவனித்துக்கொண்டு இருந்தேன். என் மகன் மீண்டும் விளையாடும் பொருட்களை எங்கள் வீட்டிற்கு கொண்டு செல்லவேண்டும் என்று கேட்க தோடங்கினான். ஆனால், யாழினி மீண்டும் திட்டவட்டமாக நான் தர மாட்டேன், அப்படி நீங்கள் எடுத்து செல்ல முயன்றால் என் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் அப்படி சொல்லிக்கொண்டே அவளின் அப்பாவிடம் மீண்டும் சொல்லிவிட்டால். சற்று நேரம் என் மகன் ஏதோ சிந்தித்தவனாய் இருந்து விட்டு, யாழினியை நோக்கி நான் இந்த பொருட்களை வீட்டிற்கு கொண்டு செல்ல மாட்டேன். இங்கேயே விளையாடிவிட்டு இங்கேயே வைத்துவிட்டு செல்கிறோம் என்றான். நான் ரெண்டு பேரும் விளையாடுவோமா என்றான். அவர்களுக்குள் உடன்பாடு ஏற்பட்டு விளையாட தொடங்கிவிட்டனர்.
குழந்தைகள் எனக்கு பெரியவர்களாக காட்சி தந்தனர். அவர்கள் முரண்களில் தேங்கி நிற்பவர்கள் அல்லர். மனக்கசப்புகளை தூக்கி சுமப்பவர்கள் அல்லர். தேவை என்ன என்பதை அறிந்தவர்கள், வெளிப்படுத்த தெரிந்தவர்கள்.
சில நேரங்களில் இருவருக்கும் பாதிப்பு அற்ற மையத்தை அவர்களால் கவனிக்க முடிகிறது, மையத்திற்காக தன்னை தளர்த்திக்கொள்ளவும் இன்னொருவரின் விருப்பத்திற்கு மதிப்பக்ளிக்கவும் முடிகிறது.
ஒருவரை ஒருவர் எங்கும் convince செய்ய முயலவும் இல்லை, convince செய்யவும் இல்லை.இவைகளெல்லாம் அவர்களிடம் கற்றுக்கொண்டேன்.
Comments
Post a Comment