எங்க வீட்டுல இருந்து வெம்பக்கோட்டை ரோட்டுல கார் எடுத்துட்டு ஒரு ரவுண்டு போலாம்னு நானும் என் பையனும் கிழம்பினோம். என் பையன் யாழினி வீட்டுக்கு போலாம் அப்பா, யாழினி விளையாட நெறய பொருள் வச்சிருக்கா. எனக்கு விளையாட பொருள் தருவா அப்டின்னு சொன்னான். நானும் அவன் சொல்லுக்கு இசைந்தேன், இருவரும் தங்கை வீட்டுக்கு போனோம். என் பையனுக்கும் என் தங்கச்சி பொண்ணுக்கும் 3 வயசு. நாங்க ரெண்டு பேரும் தங்கச்சி வீட்டுக்கு போய் சேர்ந்ததுல இருந்து குழந்தைகள் கிட்டத்தட்ட 1 மணி நேரம் விளையாடினார்கள். அதன் பிறகு என் மகன் என்னிடம் யாழினியின் விளையாட்டு சாமான்களை நம் வீட்டுக்கு கொண்டு செல்லலாம் அப்பா என்றான். உடனே யாழினி, நீங்கள் எடுத்துகொண்டு போக கூடாது. மீறினால் என் அப்பாவிடம் சொல்லிவிடுவேன் என்று சொல்லிவிட்டு அவளின் அப்பாவிடமும் சொல்லிவிட்டால். குழந்தைகள் எவ்வளவு இயல்பாக தங்களின் தேவைகளை வெளிப்படுத்துகிறார்கள் என்று எனக்கு ஆச்சரியம்.இவ்வாறான சற்று நேர விவாதங்களுக்கு இடையில் யாழினி, என் மகனிடம் உன்னை தூக்கி நான் சுற்றட்டுமா என சொல்லி...